×

இலவச கண் சிகிச்சை முகாம்

 

பந்தலூர், ஜூலை 10: பந்தலூர் அருகே பாரி அக்ரோ நிறுவனம் மற்றும் அரவிந் கண் மருத்துவமனை சார்பில் மேங்கொரேஞ்ச் தேயிலை தோட்டம் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந் கண் மருத்துவமனை மருத்துவர் ரப்பீக், பைச முஸ்தபா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். கண்புரை உண்டாகுதல், மாறு கண் நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், சீல் வடிதல், தூரப்பார்வை ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கண் அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை கோவை மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்வது மருந்து தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுவதாகவும், தரமான கண் கண்ணாடியும் குறைந்த விலையில் வழங்குவதாகவும் தெரிவித்தனர். முகாமை மேங்கொரேஞ்ச் தேயிலைத்தோட்டம் பொதுமேலாளர் ஆப்ரகாம் மேத்யூ, முதுநிலை மேலாளர் ஹரிநாயர் மேங்கொரேஞ்ச் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக்ராஜா, மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஹரிஹரன் செய்திருந்தார்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Barry Agro Company ,Arvin Eye Hospital ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை